ARTICLE AD BOX
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் அமீர் கான். தற்போது ரஜினிகாந்த்துடன் கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு 60வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கேக் வெட்டி மும்பையில் கொண்டாட்டம் நடந்த போது தனது புதிய காதலி கௌரி ஸ்பராட் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு 6 வயதில் மகன் உள்ளார்.
முன்னணி நடிகராக உள்ள அமீர் கான் 1986ல் ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிடி 2002ஆம் ஆண்டு பிரிந்தது பின்னர் லகான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவ் என்பருடன் காதல் வயப்பட்டு, 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்-
இதையும் படியுங்க : தொட்டதெல்லாம் ஹிட்… லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்த திருமணமும் விவாகரத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு முடிந்தது. இதையடுத்து கடந்த 18 மாதங்களாக வேறு ஒரு பெண்ணுடன் லிவிங் டூகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அமீர்கான் தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த பெண் கௌரி ஸ்ப்ராட் என்பவரை காதலித்து வந்ததாகவும், 60வது பிறந்தநாளில் பத்திரிகையாளர்கள் மத்தியல் அவர் அறிமுகப்படுத்தி வைத்துள்ளர். இந்த பெண்ணும் அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அமீர்கானுக்கு முதல் மற்றும் இரண்டாம் மனைவி மூலம் மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு கடந்த வருடம் திருமணம் செய்து வைத்த அவர், மகன் பாலிவுட்டில் அறிமுகமாக நடித்து வருகிறார்.
மகனுக்கு 31 வயதாகும் நிலையில் 60 வயதில் தனது மூன்றாவது காதலியை அறிமுகப்படுத்தி வைத்துள்ள அமீர்கான், விரைவில் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
