ARTICLE AD BOX
உள்ளங்கவர் நடிகை
ஸ்பெயின்-கியூபா நாட்டு திரைப்படங்களின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்தான் அனா டி அர்மாஸ். அதன் பின் “Knock Knock” என்ற அமெரிக்க திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் அனா டி அர்மோஸ் இந்திய ஹாலிவுட் சினிமா ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகையாகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில் 37 வயதான அனா டி அர்மாஸ் 63 வயது நடிகருடன் டேட்டிங் செய்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
யார் அந்த நடிகர்?
அதாவது ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகர் டாம் குரூஸுடன் அனா டி அர்மாஸ் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் ஜோடியாக கைக்கோர்த்து நடக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்புகைப்படங்களை பார்க்கும் 90’ஸ் கிட்ஸ் “எங்களுக்கு ஒரு பொண்ணு கூட அமையாம சிங்கிளாக சுற்றுகிறோம், ஆனால் 63 வயது நடிகரெல்லாம் காதலிக்கிறார்” என இணையத்தில் புலம்பி வருகிறார்களாம்.


நடிகர் டாம் குரூஸ் சமீபத்தில் வெளியான “மிஷன் இம்பாஸிபில் – The Final Reckoning” திரைப்படத்தில் டூப் இல்லாமல் தானே மலையில் இருந்து குதித்து சாகசம் செய்தது குறிப்பிடத்தக்கது.
