ARTICLE AD BOX
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்தியாவுக்காக பல மெடல்களை வாங்கியுள்ளார். ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன் தொடரில் வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று அசத்தினார்.
இதையும் படியுங்க: பிஎஸ்ஜி மருத்துவ மாணவி மரணத்தில் விலகாத மர்மம்… விசாரணையின் போது கிடைத்த முக்கிய துப்பு?!
இதற்கிடையே கடந்த 2018ல் முன்னாள் பேட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்த சாய்னா நேவால் தற்போது பிரிவதாக அறிவித்துள்ளார்.
14 வருடமாக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1997ல் இருவரும் பயிற்சிகளை தொடங்கினர். பின்னர் இருவரும் அடிக்கடி சந்திக்க நேரிட்டது. 2005ல் இருவரும் ஐதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்ற போது காதலிக்க தொடங்கினர்.
14 வருடம் காதலித்த நிலையில், 2018ல் திருமணம் செய்தனர். இந்த நிலையில்தான் இன்ஸ்டாகிராமில், சாய்னா பதிவிட்ட ஸ்டோரியில், நிறைய யோசித்த பிறகு, பாருபாள்ளி காஷ்யப்பும் நானும் பிரிய முடிவு செய்துள்ளோம். அமைதி, வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுகளை தேர்வு செய்கிறோம், அந்த நினைவுகளுக்கு நான் நன்றியுள்ளவதாக இருக்கிறேன், மேலும் எதிர்காலத்துக்காக வாழ்த்துகிறேன், இந்த கடினமான நேர்த்தில் கஷ்யப் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை புரிந்து கொண்டதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
இதில் முக்கியமாக கவின்கக வேண்டியது காஷ்யப்பின் உடல்நிலைதான். 14 வயதில் காஷ்யப்புக்கு ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் அவர் தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட முடியவில்லை. ஒரு வேளை இதுதான் காரணமா என நெட்டிசனகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.