ARTICLE AD BOX
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட கே.சவுளூரை சேர்ந்த முதியவர் காவேரி, 70, விவசாயி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருடன் திருமணமாகி கடந்த, 1996ல் விவாகரத்தும் ஆனது.
இதையும் படியுங்க: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது.. காவல்துறைக்கு ALERT!
இதையடுத்து கோவிந்தமாளின் அக்கா மங்கம்மாள், 70, என்பவரை கடந்த, 1997ல் இரண்டாவதாக திருமணம் செய்தார். திருமணமான சில மாதங்களிலேயே அவரும் காவேரியை பிரிந்து சென்றார்.

இதையடுத்து துடுக்கனஹள்ளியை சேர்ந்த கோவிந்தம்மாள், 45 என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு, திருமணம் செய்யாமல் தன் வீட்டில் மனைவி போல் வைத்து வாழ்ந்து வந்தார். கோவிந்தமாளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் துடுக்கனஹள்ளியை சேர்ந்த தங்கராஜ், 35 என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இதை காவேரி கண்டித்தும் அவர், தங்கராஜூ உடனான தொடர்பை கைவிடவில்லை. இது குறித்து நேற்று மாலை ஏற்பட்ட தகராறில், கோபமடைந்த காவேரி, கோவிந்தம்மாளை அரிவாளால் வெட்டி கொன்றார். காவேரிப்பட்டணம் போலீசார், கோவிந்தமாளின் சடலத்தை மீட்டு, காவேரியை கைது செய்தனர்.