8 மணி நேரம் மனைவியின் கைகளை கட்டி சித்ரவதை.. கணவரால் பாதிக்கப்பட்ட நிஜ ‘பாக்கியலட்சுமி’!!

2 hours ago 2
ARTICLE AD BOX

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தலுபாடு மண்டலத்தில் உள்ள கலுஜுவலபாடு கிராமத்தைச் சேர்ந்த குருநாதம் பாலாஜி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நெருங்கிய உறவினரான பாக்யலட்சுமியை மணந்தார்.

அவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி, தனது மனைவியை கடுமையாக சித்திரவதை செய்து வந்தார்.

இதற்கிடையில், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணுடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். பாக்யலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கிராமத்திற்கு வந்த பாலாஜி, பணத்திற்காக தனது மனைவியைத் துன்புறுத்தத் தொடங்கினார். பாக்யலட்சுமி கைகளை கயிறுகளால் இருபுறத்தில் உள்ள கட்டையில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்து, தலைமுடியை இழுத்து, கால்களால் உதைத்தார்.

பாலாஜிக்கு அவரது சகோதரி ரமணம்மா அவரது கணவர் விஷ்ணு ஆகியோர் உதவி செய்தனர். இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அவர்கள் அடித்து கொடுமை செய்தனர். மீண்டும் திங்கட்கிழமை இரவு மீண்டும் தாக்க முயன்றார், ஆனால் அவர் தப்பித்து அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்றார். அங்கு உள்ளூர்வாசிகள் பாக்யலட்சுமியைக் காப்பாற்றினர்.

Wife tied up and tortured for 8 hours

இந்த விஷயம் சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு, இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வர்லு கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பாக்யலட்சுமியை மார்க்கபுரம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரது கணவர், அக்கா, அவரது கணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Robo Shankar is in ICU… Medical report released! ரோபோ சங்கருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை… வெளியானது மருத்துவ அறிக்கை!
  • Continue Reading

    Read Entire Article