ARTICLE AD BOX
திருவள்ளூரில் கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 8 வயது சிறுமியை மர்ம நபர் பின் தொடர்ந்து சென்று அவரை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தேடி வரும் நிலையில் 8 நாட்களாகியும் இதுவரை அந்த நபரை கைது செய்யவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

காவல் துறையினர் ஒவ்வொரு நாள் வரும் போதும் 2 நாட்கள் கால அவகாசம் கேட்பதாகவும் ஆனால் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் செல்போன் தொலைந்தால் கூட உடனடியாக கைது செய்யும் காவல் துறையினர், சம்பவம் நடந்து இதுவரை 8 நாட்களாகியும் கைது செய்யவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது நடவடிக்கை காலதாமதமானால் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
