ARTICLE AD BOX
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்ற போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சவுக்கு தோப்பிற்கு மூதாட்டியை இழுத்துச்சென்று வாயில் மண்ணை கொட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் முதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள் அவரது காது, மூக்கில் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்து சென்று தப்பியோடினர்.
இதையும் படியுங்க: அண்ணாமலை, சீமான் ஓட்டு கேட்டு வந்தால் செ**பை கொண்டு அடிங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை!
இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்களிடம் ரத்த காயங்களுடன் கூட்டு பாலியல் கொடூரத்தில் இருந்து மீண்ட மூதாட்டி தனக்கு நடந்த கொடூரத்தை தெரிவித்தையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

பின்னர் மூதாட்டி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வர வைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் கைரேகை நிபுணர்கள் குழு ஆய்வு செய்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளார். மூதாட்டியை கூட்டு பாலியல் செய்து நகைகளை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
