ARTICLE AD BOX
திருச்செந்தூர் நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.
இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் நிறைவடைந்த பிறகு கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து பேசப்பட்டது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்.

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து கேட்டபோது, சுப்ரீம்கோர்ட் வரை சென்று புதிய பென்ஜ் அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும்.
ராமதாஸ் திமுக வெள்ளை அறிக்கை குறித்து பேசியதற்கு விளக்கம் அளித்த அவர், நேற்றைய தினம் இதுகுறித்து நிதி அமைச்சரும், மற்றொரு அமைச்சரும் விளக்கம் அளித்துள்ளனர்.

அதுவே போதுமான விளக்கம். கொடுக்கப்பட்ட வாக்குறுதியில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில வாக்குறுதிகள் தான் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.
