9 மாத திருமண வாழ்க்கைக்கு விடை என்ன? கணவர் அதிர்ச்சி பதில்!

1 month ago 34
ARTICLE AD BOX

திருச்சியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி: திருச்சி மாவட்டம், வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் செல்போன் டவர் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தன்லட்சுமி, அழகு நிலைய உரிமையாளர் ஆவார்.

இந்த நிலையில், தனலட்சுமி நேற்று முன்தினம் வழக்கம் போல் கடைக்குச் சென்றுள்ளார். பின்னர், வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கனகராஜ் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மனைவி தனலட்சுமி, கணவரைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.

Online gambling suicide

இதனையடுத்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, கனகராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ஒரே நாளில் மளமளவென குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கனகராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Vikram gives his phone number to a fan ரசிகரிடம் தனது போன் நம்பரை கொடுத்த விக்ரம்.. அந்த மனசுதான் சார்.. வைரலாகும் வீடியோ!
  • Continue Reading

    Read Entire Article