ARTICLE AD BOX
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே மேலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (46). மது போதைக்கு அடிமையான பிரகாஷ் மனைவியை விட்டு பிரிந்து திருவள்ளூர் தெருவில் தாய், தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரது பாட்டி சின்னம்மாள் (95). நேற்று இரவு வீட்டில் இருந்த போது மது போதையில் வந்த பிரகாஷ் பாட்டியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.
அப்போது பாட்டி பணம் தர மறுக்கவே கோபமடைந்த பிரகாஷ் பாட்டி நடக்க பயன்படுத்தி வந்த தடிக் கொம்பால் அவரை கொடூரமான முறையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த சின்னம்மாள் சுயநினைவை இழந்தார்.

இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சின்னம்மாளை அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னம்மாள் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சோமங்கலம் போலீசார், சின்னம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்த நிலையில் தலைமறைவாக இருந்த பிரகாஷை கைது செய்து கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
