ARTICLE AD BOX
96 பார்ட் 2
கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர் பிரேம் குமார். இந்த நிலையில் “96 பார்ட் 2” திரைப்படத்திற்காக பிரேம் குமார் எழுதிய கதை விஜய் சேதுபதிக்கு பிடிக்கவில்லை, ஆதலால் இத்திரைப்படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை இயக்குனர் அணுகினார் என்று தகவல்கள் வெளிவந்தன.
முழுக்க முழுக்க பொய்
இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆன நிலையில் இச்செய்தியை குறித்து தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் பிரேம் குமார். “இது வழக்கம் போல ஒரு தவறான செய்தி. 96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டுந்தான் 96 இரண்டாம் பாகத்தை எடுக்க முடியும். நடிகர் திரு.பிரதீப் ரங்கநாதனை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் 96 பார்ட் 2 திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.