AAA படத்துனால என்னைய யாரும் பார்க்க விரும்பல, ஆனா? -மனம் நெகிழ்ந்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்

1 month ago 36
ARTICLE AD BOX

நாளை ரிலீஸ் மாமே

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு இத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பே திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டிக்கெட்டுகள் மலமலவென விற்றுத் தீர்ந்து வருகின்றன. இவ்வாறு தடபுடலான ஓப்பனிங்கை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அஜித்தை குறித்து தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் நெகிழ்ந்து பேசியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

adhik-ravichandran-shared-that-after-aaa-movie-flop-no-actors-were-ready-to-meet-me-but-ajith-kumar-said-okay-to-his-film

நான் ஹிட் பட இயக்குனர் இல்லை, ஆனாலும்?

“குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை அஜித் சார் எனக்கு வழங்கிய சமயத்தில் நான் ஹிட் பட இயக்குனர் இல்லை. AAA படத்திற்கு பிறகு நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அவரை சந்தித்தபோது நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று சொன்னவர் அவர். அதுவரை நான் எடுத்த திரைப்படங்கள் எதுவும் பிளாக்பஸ்டர் ஹிட் இல்லை. நான் இயக்கிய முதல் திரைப்படம் சூப்பர் ஹிட். ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடினார்கள். 

adhik-ravichandran-shared-that-after-aaa-movie-flop-no-actors-were-ready-to-meet-me-but-ajith-kumar-said-okay-to-his-film

அதன் பின் AAA திரைப்படம் படுதோல்வியடைந்தது. AAA திரைப்படத்தால் என்னை பிற நடிகர்கள் சந்திக்கக் கூட தயாராக இல்லை. ஆனால் அஜித் சார் ஓடுற குதிரையையோ ஓடிக்கொண்டிருக்கும் குதிரையையோ தொடுவதே இல்லை. ஓடமுடியாத குதிரையை தொட்டு அதனை தயார் செய்து ஓடவைப்பவர்தான் அஜித் சார்” என்று நெகிழ்ச்சி பொங்க அப்பேட்டியில் பேசியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். 

ஆதிக் ரவிச்சந்திரன் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே அஜித்குமார் ஆதிக்கிடம் “நாம் நிச்சயம் ஒரு படம் பண்ணலாம்” என கூறியதாக ஆதிக் ரவிச்சந்திரன் பல பேட்டிகளில் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

  • adhik-ravichandran-shared-that-after-aaa-movie-flop-no-actors-were-ready-to-meet-me-but-ajith-kumar-said-okay-to-his-film AAA படத்துனால என்னைய யாரும் பார்க்க விரும்பல, ஆனா? -மனம் நெகிழ்ந்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்
  • Continue Reading

    Read Entire Article