ANDROMEDA நிறுவனத்தின் ஆண்டு விழா… சிறந்த சேவைக்காக மேலாளர்களுக்கு பாராட்டு!

2 months ago 27
ARTICLE AD BOX

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய கடன் வினியோகஸ்தராக திகழ்ந்துவரும் ANDROMEDA (ஆன்ரோமெடா) நிறுவன கோவை மாவட்ட கிளையின் 2024-25 கணக்காண்டிற்கான ஆண்டு விழா கொண்டாட்டம் கோவை காந்திபுரம் ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள ANDROMEDA நிறுவன கிளை அலுவலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோவை மாவட்ட கிளை அலுவலகத்தின் மேலாளர்கள் பாலன்குமார் மற்றும் காளிமுத்து ஆகியோரின் சேவைக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட 60-க்கும் மேற்பட்ட கிளை ஆலோசகர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

மாபெரும் கடன் விநியோகஸ்தராக திகழ்ந்துவரும் ANDROMEDA, 1500 நகரங்களில் 500க்கும் மேற்பட்ட கிளைகளுடன் கடன் விநியோக சேவையை வழங்கி வருகிறது. வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் என 126 நிறுவனங்களுடன் இணைந்து ANDROMEDA தனது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேலாளர்கள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளை ஆலோசகர்களுடன் ஆண்டுதோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சேவையை வழங்கி வருகிறது.

ANDROMEDA தனது வாடிக்கையாளர்களுக்கு Personal Loan, Business Loan, Home Loan, Overdraft, Cash Credit உள்ளிட்ட சேவைகளை ஒரே கூரையின் கீழ் சேவை கட்டணம் ஏதுமின்றி வழங்கி வருகிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகள் அடிப்படையில் அவர்களுக்கு பொருத்தமான வங்கியை கண்டறியவும் சேவையை பெறவும் ANDROMEDA நிறுவனம் எவ்வித சேவை கட்டணமும் இன்றி உதவுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நேர விரையும் தவிர்க்கப்படுகிறது.

ANDROMEDA நிறுவனத்தில் கிளை ஆலோசகர்களாக இணையும் அனைவருக்கும் வங்கிகளில் இருந்து வரும் பங்கு சதவீதத்திலிருந்து திருப்திகரமான தொகை அவர்களது சேவைக்காக வழங்கப்படுகிறது.

முகவர்களாக இணைவதன் மூலம் சிறந்த வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளவும் ANDROMEDA நிறுவனம் வழி வகுக்கிறது. முகவர்களாக இணைபவர்கள் வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்தால் மட்டும் போதும், ANDROMEDA வாடிக்கையாளர்களுக்கான சேவை முழுவதையும் முற்றிலுமாக ஏற்றுக்கொள்வதோடு முகவர்களுக்கு உரிய பங்குத்தொகையையும் வழங்குகிறது. இதன் மூலம் முகவர்கள் வாடிக்கையாளர்கள் என இருவரும் பயன் பெறுவதை ANDROMEDA உறுதி செய்கிறது.

  • gautham menon said that dhruva natchathiram movie surely release in july or august இந்த முறை குறி மிஸ் ஆகாது- துருவ நட்சத்திரத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் எடுத்த அதிரடி முடிவு…
  • Continue Reading

    Read Entire Article