ARTICLE AD BOX
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.
விஜய், ரஜினி, கமல், அஜித், பிரசாந்த் என அன்றைய காலக்கட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பிரபலம் அடைந்த அவர், தொடர்ச்சியாக பல விருதுகளை அள்ளினார்.
மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சிம்ரன், தற்போது குட் பேட் அக்லி படத்தில் சிறிய ரோலி நடித்திருந்தார்.
இப்படிபட்ட நிலையில், விருது விழா ஒன்றில் பங்கேற்ற சிம்ரன், சக நடிகை குறித்து சில விஷயங்கள் குறித்து பேசியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படியுங்க: எத்தனை வருடம் தான் காத்திருப்பது? மீண்டும் மீண்டும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!
அதில் அவர் பேசியதாவது, சமீபத்தில் ஒரு படத்தை பார்த்தேன், அதில் நடித்த கோ ஸ்டார் நடிகைக்கு, அந்த ரோலில் உங்களை பார்த்தது சர்ப்ரைஸாக இருந்தது என மெசேஜ் செய்தேன்.

அதற்கு அவர், Aunty ரோலில் நடிப்பதை விட இந்த ரோல் சிறந்தது என ரிப்ளை செய்தார். இப்படி உணர்வற்ற ஒரு பதில் அவரிடம் நான் எதிர்பார்க்கவில்லை.
நான் என்ன சொன்னேனோ அது என்னோட கருத்து. அவரிடம் இருந்து நல்ல பதில் வரும் என எதிர்பார்த்தேன். டப்பா ரோல்களை விட Aunty ரோல்களை தேர்வு செய்து நடிக்கலாம், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் அதை செய்திருக்கிறேன் என கூறினார்.
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 20, 2025சிம்ரன் குறிப்பிட்ட அந்த நடிகை யார் என நெட்டிசன்கள் தேட தொடங்கினர். நிச்சயம் அவர் தமிழ்நாட்டு மருமகளான அந்த நடிகைதான என கூறி வருகின்றனர்.
