Bad Girl பட நடிகை செய்த Bad ஆன விஷயம்? இவுங்க நிஜமாவே பேட் கேர்ள்தான் போலயே!

1 month ago 27
ARTICLE AD BOX

படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சை

வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் ஆகிய இருவரின் தயாரிப்பில் வர்ஷா என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “Bad Girl”. இத்திரைப்படத்தில் அஞ்சலி சிவராமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவருடன் சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் இதில் சிறார்கள் குறித்த ஆபாச காட்சிகள் இருப்பதாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் டீசரை இணையத்தில் இருந்து நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பொதுவாகவே ஒரு சில தரப்பினர் இத்திரைப்படத்தின் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அஞ்சலி சிவராமன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீர் அருந்திய புகைப்படம்…

அஞ்சலி சிவராமன் தனது தோழிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே அவர் சுற்றுலாவை சந்தோஷமாக கழிக்கும் புகைப்படங்கள் பலவற்றை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது தோழியுடன் பீர் அருந்தும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் “நிஜமாகவே இவர் பேட் கேர்ள்தான் போல?” என கம்மண்ட் செய்து வருகின்றனர். 

Bird Girl movie actress anjali sivaraman drinking beer pic viral on internet

பெரும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ள “பேட் கேர்ள்” திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஏற்கனவே ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

  • Bird Girl movie actress anjali sivaraman drinking beer pic viral on internet Bad Girl பட நடிகை செய்த Bad ஆன விஷயம்? இவுங்க நிஜமாவே பேட் கேர்ள்தான் போலயே!
  • Continue Reading

    Read Entire Article