ARTICLE AD BOX
தமிழ் சினிமா மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவில் அழகான குரல் வளம் கொண்டவர் பாடகி சின்மயி. அழகான குரலுக்காக தேசிய விருது வென்ற இவர், அண்மையில் தக் லைஃப் ஆடியோ லாஞ்சில் முத்த மழை பாடலால் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த பாடலை பாடிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதின் விளைவு, இவரை மீண்டும் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைக்கும் வரை கொண்டு வந்துள்ளது.
இதையும் படியுங்க: என்னுடைய பயோபிக்கின் பெயர் இதுதான்- சீக்ரெட்டை உடைத்த சாய் பல்லவி? விவகாரமான டைட்டில் ஆச்சே?
தக் லைஃப் படத்தில் பாடகி தீ பாடிய முத்த மழை பாடலை ஆடியோ லாஞ்சில் அவர் வராததால், சின்மயி பாடினார். அடடா என்ன குரல், இந்த குரலை கேட்டால் நம்மை ஏதோ செய்கிறதே, மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு என இப்படி, பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களை பேச வைத்துவிட்டார் சின்மயி.
என்னது இவரை போன் BAN செய்துவிட்டீர்களா என ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இதன் விளைவு தக் லைஃப் ப்ளே லிஸ்டில் இவரது குரலில் அமைந்த பாடல் 10வது இடத்தில் சேர்க்கப்பட்டது.
இது ரசிகர்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும் படத்தில் அந்த பாடல் இல்லாதது பெரும் வருத்தமே.
இதனிடையே இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, ன்மயியை கண்டிப்பாக பாட வைப்பேன் என கூறியுள்ளார். ஒரு பேட்டியில் பேசிய அவர், விரைவில் படங்களுக்கு இசையமைக்க உள்ளேன், நிச்சயம் அதில் சின்மயியை பாட வைப்பேன் என கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய் ஆண்டனி இசையமைத்த படங்களில் சின்மயி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 months ago
47









English (US) ·