ARTICLE AD BOX
தேர்தலை நோக்கி விஜய்
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான மாநாடு நடைபெற்று வருகிறது.

இன்று காலையிலேயே விஜய் தனி விமானத்தில் கோவைக்கு வந்திறங்கினார். அவரை வரவேற்க தவெக தொண்டர்களின் கூட்டம் அலைமோதிய வீடியோக்கள் பல இணையத்தில் வைரல் ஆகி வந்தன.
எத்தன தடவ சொல்றது…
இந்த நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு விழா நடக்கும் அரங்கத்தில் ஆர்ப்பரிக்கும் தவெக தொண்டர்களை கட்டுப்படுத்த முயன்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த். அப்போது அவர் ஒலிவாங்கியில் மிகவும் ஆக்ரோஷமாக கத்திய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. “ஏன் Chair-அ தூக்குறீங்க. Chair-அ கீழ போடுங்க. இப்போதானே சொல்லிட்டு வந்தேன்” என மிகவும் கோபமாக கத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.