ARTICLE AD BOX

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு கலைஞர் கைவினை திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசின் திட்டத்திற்கு சிறு மாற்றங்களை செய்துவிட்டு, அதே திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
மத்திய அரசின் கலைஞர்களுக்கான கைவினை திட்டத்தை நேரடியாக பயன்படுத்தலாம்.தமிழக அரசு போக்குவரத்து கழகம் தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

முதல்வரின் மருமகன் அதானியை சந்தித்துள்ளதாக தகவல் உள்ளது. கடந்த வாரத்திலும் முதல்வரை சேர்ந்த அதிகாரிகள் அதானியை சந்தித்தனர்.
சபரீசனும் அதானியும் இதுவரை சந்திக்கவில்லை என்று முதல்வர் சொல்வாரா? அவர் அவ்வாறு கூறினால், நாங்கள் ஆதாரத்தை வெளியிடத் தயார்.
இதையும் படியுங்க: பத்திரிகையாளர் சந்திப்புக்கு பயந்து பாதியில் ஓடிய புஸ்ஸி ஆனந்த்.. காரில் ஏறி தப்பிய வீடியோ!
விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், அந்த திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடமளிக்க வேண்டும். தணிக்கைத் துறையின் அறிக்கையின் மூலம் தமிழகம் முன்னேற்றம் அடையாமல், பின்னோக்கி சென்று வருவதாக தெரியவந்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளோம். நாளை டெல்லியில் நடைபெறும் சந்திப்புக்குப் பின் நல்ல முடிவுடன் திரும்புவோம். அதானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதன் தவறுகள் பற்றி பரிசீலிக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
The station CM வீட்டில் உள்ள முக்கிய நபர் அதானியுடன் சந்திப்பு? ஆதாரத்தை வெளியிடும் அண்ணாமலை! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.