ARTICLE AD BOX
IPL 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன.இரு அணிகளுமே சக்திவாய்ந்தவை என்பதால் இந்த மோதலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!
RCB,இதற்கு முன்பு நடந்த முதல் லீக் போட்டியில் KKR அணியை வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது.பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது என்பதால் அந்த வெற்றி மகத்தானதாக கருதப்பட்டது.
அனுபவமில்லாத கேப்டனாக இருந்தாலும் ரஜத் படிதார் தனது முதல் போட்டியிலேயே அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றார்.CSK-வை அதே போன்று வீழ்த்த முடியுமா? என்பதே தற்போதைய கேள்வியாக எழுந்துள்ளது.
CSK,தங்களது கோட்டையாக உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 9 முறை மோதிய ஆட்டத்தில் CSK 8 முறை வெற்றி பெற்றுள்ளது,இதனால் இந்த மைதானத்தில் CSK அபாரமான சாதனையை பெற்றுள்ளது.RCB இந்த மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால் மோசமான சாதனையை தகர்க்கும் மனநிலையில் இன்று களமிறங்கும்.
இந்த சீசனில் RCB-வின் ஓப்பனிங் ஜோடி – பில் சால்ட், விராட் கோலி இருவரும் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடியுள்ளனர்.அதோடு, ரஜத் படிதார்,லியாம் லிவிங்ஸ்டன்,ஜித்தேஷ் சர்மா,டிம் டேவிட்,குர்ணல் பாண்டியா ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கையளிக்கின்றனர்.குர்ணல் பாண்டியா முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.
அத்துடன் வில் நூர் அகமது,ரவீந்திர ஜடேஜா,ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரில் சூழலில்,RCB பேட்டிங் வரிசை கஷ்டப்பட வாய்ப்புள்ளது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

7 months ago
86









English (US) ·