ARTICLE AD BOX
பிக்பாஸ் சீசன் 9
சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன் வருகிற அக்டோபர் முதல் வாரம் தொடங்கப்பட உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து 8 ஆவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.
குக்கு வித் கோமாளியில் இருந்து வெளியேறிய உமைர்
இதனிடையே “குக்கு வித் கோமாளி” சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் உமைர் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே உமைர் பிக்பாஸ் சிசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகத்தான் அவர் CWC நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற கருத்து நிலவுகிறது.

எனினும் அவர் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கவுள்ளது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் உமைர் ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக ஓர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதன் காரணமாக கூட அவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

10 months ago
177









English (US) ·