ARTICLE AD BOX
சமீபத்தில் திரைக்கு வந்த DRAGON திரைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்களிடம் கவனத்தை பெற்றுள்ளது.
வெளியான 6 நாட்களில் வசூலில் உலகளவில் ₹75 கோடி வசூலித்துள்ளது. வார இறுதி நாட்களில் சுலபமாக ₹100 கோடி வரை எட்டும் என சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்க : ‘டிராகன்’ படத்தால் தெலுங்கு பட இயக்குனர் புலம்பல்…துரோகம் செய்தாரா அஸ்வத் மாரிமுத்து.!
படத்தின் கதை டான் படத்தை போல உள்ளது என கூறினாலும், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் மேஜிக் திரைக்கதை படத்திற்கு வலு சேர்த்தது.
படத்தின் நடித்த அத்தனை கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளுது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த அனுபமா, காயாடா லோபர் இருவருமே சரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் அனுபமாவுக்கு பதிலாக முதலில் படக்குழு அணுகியது நடிகை பிரியங்கா மோகனிடம்தான்., ஆனால் அவர் இந்த கதையில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம்.
தற்போது இந்த படம் வெளியாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், பட வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக தற்போது புலம்புகிறார்.
ஆனால் படத்தில் பிரியங்கா நடித்திருந்தால், நன்றாக இருந்திருக்காது, அனுபமா தான் பெஸ்ட் என கூறி வருகின்றனர். சமீப காலமாக தமிழில் ஹிட் இல்லாமல் தவித்த அனுபமாவுக்கு இந்த படம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

8 months ago
70









English (US) ·