ARTICLE AD BOX
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வந்தது. ஆட்சி மாற்றம் நடைபெற்ற பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த துணை முதல்வரும் விளையாட்டு துறை அமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள பாதியில் கட்டி முடிக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிகாரிகளோடு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், நிதி உரிமை கேட்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்ய தான் செய்வார்.
ஈடி அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்போம். மிரட்ட பார்த்தார்கள்.மிரட்டி அடிபணிந்து பயப்படுவதற்கு அடிமைக் கட்சி கிடையாது திமுக.
கலைஞர் உருவாக்கிய திமுக இது. சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கை உடைய கட்சி. தப்பு செய்தவர்கள் தான் பயப்பட தேவை நாங்கள் யாருக்கும் அடிபணிய தேவையில்லை பயப்பட அவசியமும் கிடையாது. எதை இருந்தாலும் சட்டபூர்வமாக சந்திப்போம்.
உள்விளையாட்டருக்கு பாதியிலேயே கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது இதற்கு நான்கரை கோடி ரூபாய் தேவை என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது தமிழக முதல்வர் உடனடியாக உள்விளையாட்டு இறங்கி கட்டி முடிப்பதற்கு 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
மீதமுள்ள ஒரு கோடியை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் அணியிலிருந்து பெறப்பட்டு வரும் டிசம்பருக்குள் உள்விளையாட்டு அரங்கம் கட்டி முடிக்கப்படும்
இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தோம். பல பணிகள் சிறப்பாக நடந்துள்ளது சில பணிகளில் சுணக்கம் இருந்து வருகிறது. உடனடியாக சுனக்க பணிகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

5 months ago
56









English (US) ·