ARTICLE AD BOX
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மதராஸி”. இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இதில் வில்லனாக வித்யுத் ஜம்வால் நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரசாத் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் எந்த மாதிரியான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள் என பார்க்கலாம்.
எக்ஸ் பயனர் ஒருவர் “மதராஸி” திரைப்படத்தை Disaster என்று விமர்சனம் செய்துள்ளார். ஏ ஆர் முருகதாஸின் 7 ஆம் அறிவு சிறப்பாக இருந்ததாகவும் தற்போது அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
Done with film. #Madharaasireview
2.5/5👎🏻👎🏻
*I wonder what happened to arm
I was blown away by his work 7th sense but now , dull work by him😔
*Disaster written over-all!!
*Music is average ( salambha song hindi dubbing 💀👎🏻👎🏻)
*Sika was totally misfit in that character pic.twitter.com/rTb9lF2J5X
அதனை தொடர்ந்து மற்றொருவர் “முதல் பாதி ஸ்லோவாக உள்ளது. இன்டெர்வெல் காட்சி மட்டும் நன்றாக ஒர்க்கவுட் ஆகி இருந்தது” என விமர்சனம் வைத்துள்ளார்.
Very slow first half. Story hardly moved and too many songs. Only thing worked so far is interval block. Hopefully it continues! #Madharaasi
— Praveen (@nmPraveen) September 5, 2025மற்றொரு பயனாளர் ஒருவர், “AR Murugadoss is back” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “முதல் பாதி முழுவதும் Love and Action. இரண்டாம் பாதி முழுவதும் சண்டைக் காட்சிகள்தான்” என கூறியுள்ளார்.
— ப்ரின்ஸ் லீ シ︎ (@itzLinges) September 5, 2025இன்னும் ஒரு பயனர், “மதராஸி படத்தின் முதல் பாதி முழுக்க காதலும் ஆக்சனும்தான். இரண்டாம் பாதி டீசன்ட்டாக இருக்கிறது. மொத்ததில் ஒரு Above Average திரைப்படம்” எனவும் விமர்சித்துள்ளார். இவ்வாறு “மதராஸி” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன.
#Madharaasi [#ABRatings – 3.5/5]
– Good First half packed with Love & Action. Followed by Decent second half which is completely in Action mode🤝
– Interval block, Vidhyut's solo Action block sequence, Climax Fight has been well executed 🔥
– Slight Drag in Romantic portions &… pic.twitter.com/Tb6lDr8ZTd
சமீப காலமாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய திரைப்படங்கள் சரியாக போகவில்லை என்ற நிலையில் “மதராஸி” திரைப்படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
