ARTICLE AD BOX
டாப் நடிகரிடமே இப்படியா?
அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவர் அஜித்தை வைத்து படம் இயக்க அணுகியபோது முழு கதையை தன்னால் கூற இயலாது என தைரியமாக கூறியுள்ளார். அது குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

பாலா-அஜித்
பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக இருந்தவர் அஜித்குமார்தான் என்பதை பலரும் அறிந்திருப்போம். ஆனால் அதற்கு முன்பே பாலா இயக்கிய “நந்தா” திரைப்படத்திற்காக பாலா முதலில் அணுகிய நபர் அஜித்குமார்தான்.

“நந்தா” படத்தின் ஒன்லைனை அஜித்திடம் கூறினார் பாலா. அஜித்திற்கு அந்த ஒன்லைன் மிகவும் பிடித்திருந்தது. அடுத்த நாள் அஜித்குமார் பாலாவிடம் முழு ஸ்கிரிப்படையும் கேட்டாராம். ஆனால் பாலாவோ, “ முழு ஸ்கிரிப்பட்டையும் நடிகர்களிடம் தரும் வழக்கம் என்னிடம் இல்லை. ஸ்கிரிப்டில் உள்ள சில காட்சிகளை படப்பிடிப்பின்போது மாற்றியமைப்பேன். இது எனது வழக்கம்” என கூறினாராம். இதனால் அஜித் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். .