GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!

1 week ago 9
ARTICLE AD BOX

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான விடாமுயற்சி படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிடி தளத்திற்கு சென்று விட்டது. இதையடுத்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் படம் தான் Good Bad Ugly.

இதையும் படியுங்க: பெத்த பிள்ளை கூட கண்டுக்கல..கண்ணீரில் பிரபல நடிகை..ஓடி சென்று உதவிய KPY பாலா.!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்தது. படம் குறித்து அப்டேட்களும் படக்குழு தீயாய் பரப்பி வருகிறது.

திரிஷா, பிரசன்னா, அர்ஜூன்தாஸ் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். மங்காத்தாவுக்கு பிறகு நெகட்டிவ் ரோல் என்பதால் மவுசு கூடியுள்ளது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Vijay Wish Good Bad ugly Teaser

டீசரை பார்த்து பிரபலங்களும் பலரும் வாழ்த்தி வரும் நிலையில் நடிகர் விஜய், படக்குழுவுக்கு வாழ்த்துக்களை பரிமாறியுள்ளார். அஜித்துக்கு பத்மபூஷன் விருது, கார் பந்தயத்தில் வெற்றி போன்றவைக்கு விஜய் முதல் ஆளாக வாழ்த்து கூறிய நிலையில் குட் பேட் அக்லி டீசருக்கு வாழ்த்து கூறியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!
  • Continue Reading

    Read Entire Article