Ind Vs Nz :விறு விறுப்பான நாக் அவுட் போட்டி..முதலிடத்தை தட்டிப் பறிக்க போவது யார்.!

1 week ago 9
ARTICLE AD BOX

பழைய பகையை தீர்க்குமா இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில் ஆடிவரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில்,இன்று கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இதையும் படியுங்க: அனிருத்துக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகல..கண் கலங்கிய அம்மா..மனம் திறந்து பேட்டி.!

இந்தப் போட்டியின் வெற்றியாளர் குரூப் B பிரிவில் முதலிடத்தை பிடிப்பார்கள். பல வருடங்களாக ICC தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை மட்டுமே சந்தித்து வருவதால்,அதற்கு இந்த தடவை பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

New Zealand vs India cricket news

அதன்படி டாஸ் வென்று, நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கேப்டன் மிட்செல் சாண்ட்னர், “முதலில் பந்துவீச விரும்புகிறோம். இது பேட்டிங் செய்ய ஏற்ற மைதானம். இந்திய அணியின் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி, அழுத்தம் ஏற்படுத்துவதுதான் எங்களது இலக்கு” என்று கூறினார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “முதலில் களமிறங்கி பெரிய ஸ்கோர் அடிப்பதுதான் எங்களது இலக்கு,கடந்த இரண்டு போட்டிகளில் என்ன செய்தோமே, அதனை செய்ய விரும்புகிறோம்.இன்று ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தியை சேர்த்துள்ளோம். ஸ்பின்னர்கள் அழுத்தங்களை ஏற்படுத்துவதால், வேகப்பந்து வீச்சாளர்களை அட்டாக் செய்ய முற்பட்டு, ஆட்டமிழக்கிறார்கள். இது எங்களுக்கு உதவிக்கரமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

இதனால் இந்த போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Anirudh marriage news அனிருத்துக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகல..கண் கலங்கிய அம்மா..மனம் திறந்து பேட்டி.!
  • Continue Reading

    Read Entire Article