IPL பிளே ஆஃப் 4 டீம் ரெடி..முன்னாள் வீரர் சொன்ன ரகசியம்.!

1 month ago 33
ARTICLE AD BOX

இர்பான் பதான் கணிப்பு!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,பஞ்சாப் கிங்ஸ்,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ்,குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்க: திடீரென விலகிய யுவன்…சர்தார் 2 படக்குழுவில் குழப்பம்.!

தற்போதைய நிலவரப்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.இந்த அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது.இதற்குப் பின்,இரண்டாவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்,மூன்றாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ்,நான்காவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.

மீதமுள்ள 6 இடங்களில் ஹைதராபாத்,கொல்கத்தா,சென்னை,மும்பை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன.

இந்த தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு எந்த அணிகள் முன்னேறும்? என்ற கேள்விக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என அவர் கணித்துள்ளார்.

ஏற்கனவே இந்த சீசனில் இர்பான் பதான் வர்ணனையாளர் இருந்து நிர்வாகம் தூக்கியது குறிப்பிடத்தக்கது.

  • Sardar 2 Music Director Change திடீரென விலகிய யுவன்…சர்தார் 2 படக்குழுவில் குழப்பம்.!
  • Continue Reading

    Read Entire Article