IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

1 week ago 8
ARTICLE AD BOX

பிசிசிஐ புதிய விதிகள்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில்,இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடும் கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்து உள்ளது.

இதையும் படியுங்க: என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

போட்டி நடைபெறும் மைதானத்தில் முதல் ஆட்டத்திற்கு முன்பு வெறும் 7 முறை தான் பயிற்சி செய்ய வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

BCCI bans sleeveless jerseys in IPL

மேலும் வீரர்கள் கை இல்லாத பனியன்களை அணிந்து மைதானத்திற்குள் வருவதன் மூலம் சில விளம்பரங்கள் ஜெர்சியில் இடம்பெறாமல் போய்விடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் தற்போது பிசிசிஐ இனி கை இல்லாத பனியன்களை வீரர்கள் அணிந்து வரக்கூடாது,முதல் தடவை எச்சரிக்கை கொடுக்கப்படும்,இரண்டாவது முறையும் அதே தவறை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

அதேபோன்று வீரர்கள்,அணி நிர்வாகிகள் விளம்பரப் பலகைக்கு முன் தங்களுடைய இருக்கைகளை போட்டு உட்கார கூடாது என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.இனிமேல் குடும்பத்தினர் யாரும் வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரக்கூடாது,போட்டிகள் நடைபெறாத நாளிலும் கூட குடும்பத்தினர் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வர பிசிசிஐ தடை விதித்துள்ளது.

மேலும் வீரர்கள் தங்களுடைய சொந்த வாகனத்தில் எங்கும் வெளியே செல்லக்கூடாது, அணி நிர்வாகம் வழங்கும் பேருந்தில் மட்டும்தான் வீரர்கள்பயணிக்க வேண்டும், குடும்பத்தினர் அந்த பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என பல ரூல்ஸ்களை போட்டுள்ளது,பிசிசிஐயின் இந்த விதிமுறைகளால் வீரர்கள் கடும் அதிர்ப்பதியில் உள்ளனர்.

  • Aadukalam movie casting controversy என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!
  • Continue Reading

    Read Entire Article