IPL-லின் கோட்…18வருட கிங்..ஷாருகான்புகழாரம்…!

1 month ago 37
ARTICLE AD BOX

ஐபிஎல் ஒரிஜினல் பிளேயர் விராட் கோலி

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கியது.இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இதையும் படியுங்க: கணவரை திருடுறாங்க..மதுரை முத்துவின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு.!

போட்டிக்கு முன்பாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஸ்ரேயா கோஷல், கரண் அஜ்ல் மற்றும் பாலிவுட் நடிகை திசா படானி கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

IPL 2025 First Match

இதையடுத்து, பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் இரண்டு அணிகளையும் அறிமுகப்படுத்தினார்.அப்போது, பெங்களூரு அணிக்காக விளையாடும் இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரர் விராட் கோலியை அவர் சிறப்பாக வரவேற்றார்.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய முதல் சீசன் முதல்,ஒரே அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் ஒரே வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.இதை முன்னிட்டு,ஷாருக் கான் அவரை “ஓஜி” என்றும்,”22 யார்டின் கிங்” என்றும் புகழ்ந்தார்.

மேலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்திலும் அரசர்,அனைவரும் இந்த ‘கிங் கோலிக்கு’ உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.இதையடுத்து, மைதானம் முழுவதும் இருந்த ரசிகர்கள் “கோலி! கோலி!” என ஆரவாரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட விராட் கோலி “இந்த அன்பான அறிமுகத்துக்கு நன்றி,சாருக் பாய் புதிய தலைமுறை மெதுவாக முன்னேறி வருகிறது.அதே நேரத்தில் பழைய தலைமுறையும் இன்னும் இருக்கிறது” என்று உருக்கமாக பேசினார்.

பின்னர் “ஜோமே ஜோ பதான்” என்ற பாடலுக்கு ஷாருக் கான் மற்றும் விராட் கோலி இணைந்து நடனமாடினார்கள்.

இறுதியாக 18 வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடி வருகிற வீரர் என்ற சாதனையை படைத்த விராட் கோலிக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி சிறப்பு நினைவுப் பரிசு வழங்கினார்.

  • Madurai Muthu wife viral video கணவரை திருடுறாங்க..மதுரை முத்துவின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு.!
  • Continue Reading

    Read Entire Article