SKக்கு வந்த அதே பிரச்னை.. கடைசி நேரத்தில் சிக்கிய தனுஷ்!

2 weeks ago 16
ARTICLE AD BOX

தனுஷ் நடித்துள்ள குபேரா படத் தலைப்பு ஏற்கனவே தெலுங்கு படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குபேரா. இந்த நிலையில், கரிமகொண்டா நரேந்தர் என்ற தெலுங்ககு படத் தயாரிப்பாளர், அங்குள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் இதே தலைப்பை கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர், “குபேர என்ற பெயர் கொண்ட படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், அதே தலைப்பை சேகர் கம்முலா அவர் படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். எனவே, அவர் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். இல்லை என்றால் எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்னையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு சுமூகமாக முடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் இந்தப் படத்தின் தலைப்புக்கு சிக்கல் வந்துள்ளது.

Dhanush Kubera Title Issue

பராசக்தி தலைப்பு பிரச்னை: முன்னதாக, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில். நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டு, அதன் டைட்டில் டீசரும் வெளியானது. இவ்வாறு வெளியானபோதே சிவாஜி ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.

இதையும் படிங்க: ’ஆஜராக முடியாது’.. சம்மன் கிழிப்பு.. Sorry கேட்ட சீமானின் மனைவி.. அடுத்தடுத்து பரபரப்பு!

பின்னர், இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில், விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் தெலுங்கு பதிப்புக்கும் பராசக்தி என்ற பெயரே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனவரி 11ஆம் தேதியே பராசக்தி என்ற தலைப்பை பதிவு செய்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளரான டான் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியது.

மேலும், பராசக்தி பட தலைப்பை சிவகார்த்திகேயனுக்கு வழங்கியதாகவும் ஏவிஎம் நிறுவனம் வாழ்த்து தெரிவித்தது. ஆனால், சிவாஜியின் பராசக்தி படத்தை இணைந்து தயாரித்திருந்த நேஷ்னல் பிக்சர்ஸ் நிறுவனம், சிவாவின் படத்திற்கு பராசக்தி என்ற தலைப்பை வைக்கக்கூடாது என கெடுபிடி விதித்ததும் குறிப்பிடத்தக்கது.

  • Dhanush Kubera Title Issue SKக்கு வந்த அதே பிரச்னை.. கடைசி நேரத்தில் சிக்கிய தனுஷ்!
  • Continue Reading

    Read Entire Article