ARTICLE AD BOX
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி பாதையை உருவாக்கி,சினிமாவில் பல துறைகளில் மன்மதனாக கலக்கி வருபவர் நடிகர் சிம்பு.
இதையும் படியுங்க: உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!
இவருடைய கடந்த பிறந்தநாளன்று தன்னுடைய அடுத்தடுத்து படங்கள் குறித்த அப்டேட்டை வெளியிட்டார்,அதன் படி அவருடைய 50 வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்,முதலில் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது,ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என கூறி படத்தை கைவிட்டது.
அதனால் தற்போது சிம்புவே தன்னுடைய ‘ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் எடுக்கவுள்ளார்,இந்த நிலையில் சமீபத்தில் யுவன்சங்கர் ராஜா தயாரித்து இசையைத்துள்ள ‘ஸ்வீதார்ட்’ படத்தின் இசை வெளியிட்டுவிழாவில் பேசிய இயக்குனர் தேசிங் பெரியசாமி “சும்மா ஒரு நாள் யுவன் சாரை சந்தித்து சிம்புவின் 50வது பட கதையை சொன்னேன்,அவர் உடனே எப்போது வேலைகளை தொடங்கலாம் என கேட்டார்,அப்போது சிம்பு சாருக்கு போன் செய்து பேசுவதும் அவர் தான்,அவர் தந்த உற்சாகம் தான் இப்போது இந்த படத்தை எடுக்க முடிவு எடுத்துள்ளளோம்,இல்லையென்றால் இந்த கதை அப்படியே கைவிட்டு போயிருக்கும் என அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருப்பார்.