ARTICLE AD BOX
பேரழகி திரிஷா…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா பேரழகியாக தோன்றியுள்ளார் ஈ ரசிகர்கள் பலரும் வியந்து கூறி வருகின்றார். இந்த நிலையில் திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருந்த ஒரு பதிவு இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Toxic மக்களே…
“Toxic மக்களே, நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் அல்லது நிம்மதியாக தூங்குகிறீர்கள்? சமூக வலைத்தளங்களில் அமர்ந்து மற்றவர்களை பற்றி Sense இல்லாமல் பேசுவது உங்கள் வாழ்நாளை அழகாக்குகிறதா என்ன? பெயரில்லா கோழைத்தனம் இது. உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் திரிஷா பகிர்ந்துள்ளார். திரிஷாவின் இந்த இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
