ARTICLE AD BOX
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி
பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று இத்திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் VFX தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு பிரம்மாண்ட பிராஜெக்ட்டாக உருவாகவுள்ளதாக இந்த வீடியோவின் மூலம் தெரிய வருகிறது.
VFX நிபுணர்களுடன் சந்திப்பு
இந்த நிலையில் அல்லு அர்ஜுனும் அட்லீயும் அமெரிக்காவின் பல பிரபல VFX நிபுணர்களை சந்தித்த வீடியோவை அறிவிப்பு வீடியோவாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். VFX மூலம் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்தை உருவாக்குவதன் முயற்சி இந்த வீடியோவின் மூலம் தெரிய வருகிறது. இதன் மூலம் இத்திரைப்படம் மிகப் பெரிய பிரம்மாண்டமான ஒரு Fantasy திரைப்படமாக உருவாகவுள்ளது தெரிய வருகிறது.
இது அல்லு அர்ஜுனின் 22 ஆவது திரைப்படமாகும். அதே போல் இது அட்லீயின் 6 ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

6 months ago
67









English (US) ·