ARTICLE AD BOX
டிரெண்டிங் இசையமைப்பாளர்
தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற ஆல்பம் பாடலின் மூலம் ரசிகர்களை நடனமாட வைத்த சாய் அப்யங்கர், அதனை தொடர்ந்து “ஆச கூட”, “சித்திர புத்திரி” போன்ற ஆல்பம் பாடல்களை வெளியிட்டார். அப்பாடல்களும் பட்டையை கிளப்பின.

இதனை தொடர்ந்து “பென்ஸ்” திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார் சாய் அப்யங்கர். இதனை தொடர்ந்து சூர்யாவின் “கருப்பு”, சிம்புவின் “STR 49”, பிரதீப் ரங்கநாதனின் “Dude”, அல்லு அர்ஜுன்-அட்லீ இணையும் “AA22xA6” ஆகிய திரைப்படங்களுக்கும் சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார். இவ்வாறு தமிழில் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ள சாய் அப்யங்கர் தற்போது மலையாள சினிமா உலகில் காலடி எடுத்துவைக்கிறார்.
Welcome to Malayalam Cinema
அதாவது மலையாளத்தில் Shane Nigam நடிப்பில் உருவாகி வரும் “பல்டி” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் மலையாள சினிமா உலகில் அறிமுகமாகிறார். இவரை வரவேற்கும் விதமாக மோகன்லால் இவருக்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.

“பல்டி” திரைப்படத்தை உன்னி சிவலிங்கம் இயக்குகிறார். இத்திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.