ARTICLE AD BOX
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை
தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட பட விழாக்களில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸ் ஆனவர்.
இதையும் படியுங்க: சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!
மேலும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்தார்,முக்கியமாக சரக்கு பட நிகழ்ச்சியில் தொகுப்பாளினிக்கு அத்துமீறி மாலை போட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,இந்தச் சூழலில் விஜய்யை அவர் கலாய்த்து பேசியிருக்கிறார்.
இயக்குனர் லாவண்யா இயக்கத்தில் உருவான “பேய் கொட்டு” திரைப்படத்தின் விழாவில் பங்கேற்று பேசிய போது காஞ்சிபுரம்னா பட்டு..இந்தப்படம் பேய் கொட்டு..சாப்பிட தேவை தட்டு..என தன்னுடைய பாணியில் பேச ஆரம்பித்தார்.
அதன் பிறகு என்கூட இருப்பவர்கள் எல்லாம் அல்லாகூட இருப்பவர்கள்தான் புரிகிறதா,ஆனால் நான் குல்லா போடும் ஆள் இல்லை,வாட் ப்ரோ.. திஸ் இஸ் வெரி ராங் ப்ரோ…குவார்ட்டர்,கோழி பிரியாணி கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்ப்பவன் இல்லை இந்த கூல் சுரேஷ்,நான் காட்சி ஆரம்பித்திருக்கிறேன்,தனித்துதான் நிற்கப்போகிறேன்,பல கோடி செலவு செய்து மாநாடு நடத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்அடுத்தி, பள்ளிக்கூடம், மருத்துவமனை, வேலைகளுக்கு செல்பவர்களை தொந்தரவு செய்வதற்காக நான் கட்சியை ஆரம்பிக்கவில்லை” என்று கூறி நடிகர் விஜயை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய கூல் சுரேஷ் 👍 pic.twitter.com/EZfauJrajc
— Thangaraj🚩 (@ithanagaraj) March 12, 2025இதனால் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூல் சுரேஷை பகிரங்கமாக தாக்கி வருகின்றனர்.