ARTICLE AD BOX
ரச்சிதா மகாலட்சுமியின் புதிய படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் மூலம் புகழைப் பெற்ற ரச்சிதா,பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.
இதையும் படியுங்க: வதந்திகளை தயவு செய்து பரப்பாதீங்க…அஸ்வத் மாரிமுத்து கோரிக்கை.!
இந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ‘ஃபயர்’ திரைப்படம்,ரச்சிதா மகாலட்சுமிக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
இப்படத்தில் மிகவும் கவர்ச்சி காட்சிகளில் நடித்து பல வித சர்ச்சைகளில் சிக்கினார்,ஆனால் படத்தின் கதைக்கு ஏற்ப தான் நடித்துள்ளேன் என அவருடைய தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஸ்ரீ காவ்யா மூவீஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கான பூஜையில்,லாவண்டர் நிற சுடிதாரில் கலந்துகொண்ட புகைப்படங்களை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.”வாழ்த்துக்கள் மக்களே! என்னுடைய அடுத்த படம் ஆரம்பமாகிவிட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
அவருடைய பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.