ARTICLE AD BOX
Freedom-க்கு Freedom இல்லையா?
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஃப்ரீடம்”. இத்திரைப்படத்தை பாண்டியன் பரசுராமன் என்பவர் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானபோதே ரசிகர்களின் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் இலங்கை தமிழர்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவாகியுள்ளது.
இதில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் இலங்கை தமிழர்களாக நடித்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இத்திரைப்படம் பயணிப்பதாக தெரிய வருகிறது. இத்திரைப்படம் இன்று (ஜூலை 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இத்திரைப்படம் வெளியாகவில்லை.

என்ன காரணம்?
சில பொருளாதார காரணங்களினால் இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை நாளை (ஜூலை 11) வெளியிட படக்குழுவினர் தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
எனினும் இத்திரைப்படம் வெளியாகாததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்க வாய்ப்பிருக்குமோ? என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இயக்குனர் சத்யசிவா, “கழுகு”, “சிவப்பு”, “கழுகு 2”, “நான் மிருகமாய் மாற” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃப்ரீடம்க்கு Freedom இல்லையா? சசிகுமார் திரைப்படம் வெளியாகாததற்கு இதுதான் காரணமா?
                  
                        3 months ago
                                49
                    








                        English (US)  ·