ARTICLE AD BOX
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஜெபஸ்டின் ராஜ் (வயது 31) என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜெபஸ்டின் உடைய மனைவிக்கு 16 வயதுடைய தங்கை உள்ளார்.
இந்த நிலையில் ஜெபஸ்டின் ராஜ் மனைவி வீட்டில் 4 மாதங்களாக தங்கி உள்ளார். சிறிய வீடு என்பதால் அனைவரும் ஒரே இடத்தில் தூங்கி வருகின்றனர்.
இதையும் படியுங்க: உதவி கேட்ட பெண்ணுடன் உல்லாசம்… லட்ச லட்சமாக கொட்டிய பணம் : காக்கிச்சட்டையின் கோர முகம்!
இந்த நிலையில் மனைவியின் தங்கையான 16 வயது சிறுமியை தூங்கும் பொழுது ஜெபஸ்டின் ராஜ் சிறுமியின் வாயை பொத்திக்கொண்டு உடலுறவு கொண்டுள்ளார். இதுகுறித்து வீட்டில் உள்ளவர்கள் யாரிடம் தெரிவித்தால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில் சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருந்தது குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில் இதுகுறித்து சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் ஜெபஸ்டின் ராஜை விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நாகப்பட்டினம் சிறையில் அடைத்துள்ளனர்.
அக்காவை திருமணம் செய்து ஆறே மாதத்தில் தங்கையை கர்ப்பம் ஆகிய மாமாவின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
