ARTICLE AD BOX
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்கவும், குறிப்பாக தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியசாமி மற்றும் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்துக் கூறும் போது, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் 6 மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
பெண்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் மூலம் நடத்தப்படுகிறது.
இதன்படி கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு முதலமைச்சர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பெற்றோர் இல்லாத குழந்தைகள் கல்வி செலவிற்காக மாதம் நிதி உதவி வழங்கும் அன்பு கரங்கள் திட்டம் முதலமைச்சர் செயல்படுத்த உள்ளார்.
2,82,000 குழந்தைகளுக்கு தமிழ்நாடு முழுவதும் இத்திட்ட மூலம் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இன்று புதிய செயலி அறிமுகப்படுத்த உள்ளோம் அதன் மூலம் அனைத்து குழந்தைகள் எடை, உயரம்மற்றும் தரவுகள் பதிவு செய்யப்படும்.
குழந்தைத் தொழிலாளர் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த கேள்விக்கு
கொத்தடிமைகள் என்பது தொழிலாளர் நலத்துறை பார்த்து வருகின்றனர். எங்களது துறை மீட்டெடுத்து வரும் குழந்தைகளை பாதுகாப்பது படிக்க வைப்பது பெற்றவுடன் சேர்ப்பது என்பதாகும்.
குழந்தை தொழிலாளர்களாக இருக்கட்டும், குழந்தை உரிமை குழந்தை கல்வி ஆகியவற்றில் முதலமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார்.
அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பது குறித்த கேள்விக்கு, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறவில்லை. அரசு பரிசீலனை செய்து வருகிறது. எப்போது நிறைவேற்றப்படும் என்பதை நான் மட்டும் எப்படி சொல்ல முடியும்.