ARTICLE AD BOX
ஹிட் அடித்த குட் பேட் அக்லி?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நிலையில் அஜித் ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்ட திரைப்படமாக இது அமைந்தது. வெகுஜன ரசிகர்கள் இத்திரைப்படத்தை இன்ஸ்டாகிரம் ரீல்ஸ் போல் உள்ளதாக ட்ரோல் செய்து வந்தனர். ஆனால் அஜித் ரசிகர்கள் “இது எங்களுக்கான திரைப்படம்” என சர்ப்போர்ட்டுக்கு வந்தனர்.
எனினும் இத்திரைப்படம் வெளியாகி ரூ.300 கோடிகள் வசூல் செய்தது. அஜித் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான “விடாமுயற்சி” திரைப்படத்தை ஒப்பிடும்போது “குட் பேட் அக்லி” திரைப்படம் வெற்றித் திரைப்படமாகவே அமைந்தது. இந்த நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை குறித்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.
விற்பனையாகாத உரிமம்
அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.95 கோடிக்கு வாங்கியது. ஆனால் இப்போது வரை “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்கப்படவில்லை என கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி பெற்றிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டதாம். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் இப்போது வரை விறகப்படவில்லை என கூறப்படுகிறது. அதே போல் சூர்யாவின் “ரெட்ரோ” திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்கப்படவில்லையாம்.