ARTICLE AD BOX
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், இதில் அஜித் குமார் நடித்த ஒரு புகழ்பெற்ற காட்சியை நினைவூட்டும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. Wednesday சீசன் 2 டிரெய்லரில், முன்னணி நடிகை ஜென்னா ஒர்டேகா ஆயுதங்களை எடுத்து காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் ஒரு காட்சி உள்ளது.
இந்தக் காட்சி, 2001-ல் வெளியான தீனா திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் நடிகை லைலாவிடம் ஆயுதங்களை ஒப்படைக்கும் காட்சியை போல உள்ளது.
இதையும் படியுங்க: அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!
இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள், அஜித் குமார் ஹாலிவுட்டை பாதிக்கிறார் என்றும், அதனால்தான் Wednesday படைப்பாளர்கள் அவரது திரைப்படத்தின் இந்த புகழ்பெற்ற காட்சியை மீண்டும் உருவாக்கியுள்ளனர் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், விஜய் ரசிகர்கள் சிலர், Wednesday தொடரின் படைப்பாளர்களுக்கு அஜித் குமாரின் தீனா பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தற்செயலாக எடுக்கப்பட்ட காட்சியாகத்தான் இருக்கும் என கருத்து தெரிவித்தனர்.
இருப்பினும், Good Bad Ugly திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Wednesday சீசன் 2 டிரெய்லரில் அஜித் படத்தின் காட்சியை காப்பியடித்துள்ளதாக அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.