ARTICLE AD BOX
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விஜய் குறித்து அவர் சமீபத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: உன் மேல ஆசை.. உல்லாசமா இருக்கலாமா? புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலர்!
தற்போது அவர் வெளியிட்ட பதிவில், “யாராவது என்னிடம் ‘உங்களுக்கு அஜித் பிடிக்குமா அல்லது விஜய் பிடிக்குமா?’ என்று கேட்டால், நான் எப்போதும் அஜித் என்று பதிலளிப்பேன். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல, பெண்களை மதிக்கும் ஒரு உண்மையான மனிதர்.
ஒரு குடும்பத் தலைவராக, அவர் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார். அவரது ரசிகர்களும் இதைப் பின்பற்றுகின்றனர். அஜித் சாரின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துவதோ அல்லது துன்புறுத்துவதோ இல்லை. அவர்கள் கோழைகள் இல்லை; மாறாக, கண்ணியமாகவும், தரமாகவும் நடந்து கொள்கிறார்கள்.
அஜித் சார் தனது ரசிகர்கள் ஆன்லைனில் பெண்களை அவமதிப்பதையோ அச்சுறுத்துவதையோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அவர் விளம்பரமின்றி பலருக்கு அமைதியாக உதவி செய்தவர்.

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களையோ அச்சுறுத்தல்களையோ ஊக்குவிக்கும் அல்லது அதைப் புறக்கணிக்கும் எந்தத் தலைவரும் உண்மையான தலைவர் என்று அழைக்கப்பட தகுதியற்றவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
