ARTICLE AD BOX
மீண்டும் இணையும் அஜித்-ஆதிக் கூட்டணி?
“குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அஜித் பல நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் வருகிற நவம்பர் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!
இந்த நிலையில் அஜித்குமார்-ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தை ஐசரி கணேஷ் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் ஐசரி கணேஷ் அந்த பிராஜெக்ட்டில் இருந்து தற்போது விலகிவிட்டாராம். அதனை தொடர்ந்து பல தயாரிப்பாளர்களிடம் இந்த புராஜெக்ட் சென்றுள்ளது. ஆனால் எவரும் இத்திரைப்படத்தை தயாரிக்க முன்வரவில்லையாம்.
இவ்வாறு எந்த தயாரிப்பாளரும் முன்வராததற்கு காரணம் அஜித்குமார் போடும் நிபந்தனைகள்தான் என கூறப்படுகிறதாம். அதாவது அஜித்குமார் ரூ.180 கோடி சம்பளம் கேட்கிறாராம். அதில் 50 சதவீதத்தை முன்பணமாக கேட்கிறாராம். மேலும் மீதி பணத்தை எதிர்கால தேதியிட்ட காசோலை (Post Dated Cheque) ஆக முன்கூட்டியே தரவேண்டும் என கூறுகிறாராம். அதே போல் இந்த மொத்த பணத்தையும் படப்பிடிப்பு நடைபெறும்போதே தந்துவிட வேண்டும் எனவும் நிபந்தனை போடுகிறாராம். இந்த நிபந்தனைகளால்தான் தயாரிப்பாளர்கள் பின் வாங்குவதாக கூறப்படுகிறது.