ARTICLE AD BOX
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறை விசாரனையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கோவில் ஊழியர்கள் இன்று விசாரனைக்கு ஆஜராக நேரில் வந்து சி.பி.ஐ அதிகாரி சம்மன் வழங்கி சென்றனர்.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த 28 ஆம் தேதி திருப்புவணம் காவல் நிலைய திருட்டு வழக்கு விசாரனைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்து சென்றபோது கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சி.பி.ஐ தற்சமயம் விசாரனை மேற்கொண்டு வருகிறது. கடந்த 14 ஆம் தேதி முதல் நாளான சி.பி.ஐ விசாரனையின்போது டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் அறநிலையத்துறை அலுவலகம் பின்புறமுள்ள கோசாலை, அரசினர் மாணவர் விடுதி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விசாரனையை துவங்கினர்.
இரண்டாவது நாளான நேற்று மதுரை பகுதிகளில் ஆவனங்களை பெறும் பணியினை மேற்கொண்டதுடன் இன்று இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர்களுக்கு விசாரனைக்கான சம்மனை வழங்கினர்.
இதில் அஜித்குமார் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆனையர் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமாரின் சக ஊழியர்களான பிரவின்குமார், வினோத்குமார், ஆகியோர் மற்றும் அஜித்குமாரின் சகோதரரான நவீன்குமார் ஆகியோருக்கு மடப்புரம் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு வந்த சி.பி.ஐ அதிகாரி நேரில் அனைவரையும் வரவழைத்து நாளை மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக கூறி வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் சம்மன் அளிக்கப்பட்ட அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திகேயன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் அஜித்குமாரின் சகோதரர் நவீன் மற்றும் அஜித் குமாருடன் காவலராக பணிபுரிந்த பிரவீன் குமார் வினோத்குமார் ஆகியோர் இன்று மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகினார்கள்.
