ARTICLE AD BOX
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படியுங்க: இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!
இந்த நிலையில் அஜித்தை முதன்முதலில் படத்தில் நடிக்க காரணமே பழம்பெரும் பாடகர் எஸ்பிபி பாலசுப்பிரமணியம்தான் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.
இந்த தகவலை எஸ்பிபியே கூறியுள்ளார். பிரபல சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த தகவலை கூறியுள்ளார். மேலும் தனது மகன் சரண், அஜித்தும் ஒரு வகுப்பில் படித்ததாகவும், அஜித முதன்முதலில் நடித்தது தெலுங்கு படத்தில்தான்.
அவரை அறிமுகப்படுத்தயே நான் தான். படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நான் அறிமுகப்படுத்தினேன். 1993ல் வெளியான Prema Pusthakam படத்தில் நடித்திருந்தார். அஜித் விளம்பர படங்களில் நடிக்க சரணுடைய சர்ட், ஷூவை போட்டுக் கொண்டுதான் போவார்.
அஜித்தும் சரணும் மெட்ரிகுலேஷன் ஆந்திராவில் போய் தான் எழுதுவார்கள். இருவரும் நல்ல நண்பர்கள் என கூறியுள்ளார். எஸ்பிபி கூறிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.