அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

1 month ago 45
ARTICLE AD BOX

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.இதனை நடைமுறைப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்க: ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

இந்த கிரிக்கெட் மைதானத்திற்காக கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.மைதான அமைப்புக்கான நிலத்திற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு,இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து தேவையான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.

இந்த சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் 28 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது.இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களின் கட்டுமான முறைகளோடு ஒப்பிட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான திட்டக் கோவைகள் தயாராகி, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளன.

இந்த மைதானம் உருவான பிறகு,தமிழகத்தில் அதிக அளவில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உருவாகும் தகவல்,விளையாட்டு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் இப்படிப் பெரிய கிரிக்கெட் மைதானம் அமைய இருப்பது முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

  • Sruthi Narayanan viral video ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!
  • Continue Reading

    Read Entire Article