ARTICLE AD BOX
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி முதன்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
வெறித்தனமாக ஆர்சிபி வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ந்த நிலையில் சின்னசாமி மைதானத்தில் இன்று ஆர்சிபி அணி வீரர்களக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அதற்கு முன் பெங்களூருவில் பேருந்தில் ஆர்சிபி அணி வீரர்கள் மைதானத்திற்கு வந்தனர். அதை காண கூட்டம் கூடியது. மேலும் சின்னசாமி ஸ்டேடியத்தை சுற்றி கூட்டம் அலைமோதியது.
கர்நாடக முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் விதான் செதளா வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ள நிலையில், வீரர்களை வரவேற்க கூட்டம் கூடியது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் விதான் சௌதா வளாகத்தில் பாராட்டு விழா நடந்து வரும் நிலையில், அவ்வழியே உள்ள சின்னசாமி ஸ்டேடியம் அருகே கூட்ட நெரிசலில் பலியாகி வருகின்றனர்.

5 months ago
47









English (US) ·