ARTICLE AD BOX
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2
நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தின் பூஜை விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதையும் படியுங்க: என்னைய மறந்துட்டாங்க…புலம்பும் விஜய் பட வில்லன்..!
2020 ஆம் ஆண்டு ஓடிடி வழியாக வெளியான “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து,அதன் இரண்டாம் பாகத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இருவரும் இந்த முறையில் இயக்கத்தை மேற்கொள்ளவில்லை.மாறாக, இயக்குநர் சுந்தர் சி இப்படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நயன்தாரா மட்டுமல்லாமல்,ரெஜினா கசெண்ட்ரா, இனியா,மைனா நந்தினி,யோகி பாபு,சிங்கம்புலி,விச்சு விஸ்வநாத் ஆகியோரும் நடிக்கின்றனர்.முதலில் அருண் விஜயை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு அணுகியது,ஆனால் அவர் சம்பளம் அதிகமாக கேட்டததால்,தற்போது கன்னட நடிகர் துனியா விஜயை படக்குழு தேர்வுசெய்துள்ளது.ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இப்படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது,படப்பிடிப்பு மார்ச் 15 முதல் தொடங்கப்பட உள்ளது.இப்படத்துக்காக நயன்தாரா விரதம் இருந்து நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு, சினிமா ரசிகர்களுக்கு இப்படம் செம விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
