ARTICLE AD BOX
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார்.
இதையெல்லாம் மறுத்து வரும் அன்புமணி எந்த தவறும் செய்யாமல் மன்னிப்பு கேட்கிறேன் என சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க தலைமை செயலகம் வந்த சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் திடீர் நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க: ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!
இதனால் நிர்வாகிகள் தரப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பதற்றம் அடங்குவதற்குள் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணியும் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பாமக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்த போது, அன்புமணி நாளை சேலம் மற்றும் தருமபுரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
 அதனால் இரு மாவட்டங்களில் உள்ள முக்கிய தலைவர்களான இரு எம்எல்ஏக்கள் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 இவர்கள் இருவருமே ராமதாஸின் தீவிர ஆதரவாளர்களாக உள்ளனர். குறிப்பாக எம்எல்ஏ அருள், அன்புமணியின் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவிததிருந்தார்.
ஜிகே மணி, ராமதாஸ்க்கு விசுவாசியாகவும், அன்புமணி மற்றும் ராமதாஸை இணைக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்.
 
                        4 months ago
                                65
                    








                        English (US)  ·