ARTICLE AD BOX
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது திவ்யவதர்ஷினி என்கிற டிடி. இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவிலும் நடித்துள்ளார்.
இதையும் படியுங்க : விஜய் என்கிட்ட ஒன்னு கேட்டார்..பல நாள் ரகசியத்தை உடைத்த ரம்பா.!
இவருக்கு முகவரி தேடி தந்தது விஜய் டிவியின் காபி வித் டிடி நிகழ்ச்சிதான். பல ஆண்டுகளாக சிறந்த தொகுப்பாளினியாக இருந்த டிடி, உடல்நிலை காரணமாக விலகினார்.
இதைதொடர்ந்து விஜய் டிவியில் கோலோச்சி வருவது பிரியங்காதான். அண்மையில் கூட பிரியங்காவுக்கும், மணி மேகலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு மணிமேகலை விலகினார்.
இதையடுத்து மணிமேகலை ஜீ தமிழ் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வருகிறார். இந்த நிலையில் பிரியங்கா குறித்து டிடி சொன்ன விஷயம் வைரலாகி வருகிறது.
அதில் எனக்கு பிரியங்காவை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. எந்த இடத்திலும் அடித்து வேலை செய்பவர் அவர், எங்களை பார்த்து மேலே வந்ததாக கூறினார். ஆனால் அடுத்தவர்களுக்கு நாம் வழிவிடுவதில் எந்த தவறும் இல்லை என அறிவுறுத்தியுள்ளார்.

9 months ago
75









English (US) ·